22ஆம் நாள் நடைபெற்ற பலதரப்புவாதம் மற்றும் அமைதி மூலம் தகராறுகளைத் தீர்த்து சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை முன்னேற்றுவது பற்றிய ஐ.நா பாதுகாப்பவையின் உயர் நிலை விவாதக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபுஸுங் உரைநிகழ்த்தினார்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் வகையில், சர்வதேச சமூகம் பலதரப்வாதத்தைப் புத்துயிர் பெறச் செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தகராறுகளை அமைதியான முறையில் தீர்ப்பதில் ஊன்றி நிற்க வேண்டும். சர்வதேச சமூகம் குறிப்பாக முக்கிய பெரிய நாடுகள், நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்குப் பதிலாக, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புக்கு வழிநடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.