உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில், இந்தியா முன்னணி வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை முந்தியுள்ளதென நம்பியோ (Numbeo) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குறியீடு தெரிவிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நம்பியோ தரவுத்தளம் வெளியிடும் இந்த பட்டியலில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலையில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடான அன்டோரா, இந்தாண்டின் உலகின் மிகப் பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்டோராவுக்கு அடுத்த இடத்தில, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன், ஹாங்காங், ஆர்மீனியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு! இந்தியாவின் இடம் என்ன?
