சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டுக் கூட்டத் தொடர்களின் செய்தி மையம் தொடக்கம்
சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேர
வையின் 3ஆவது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாளில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசியக் கமிட்டியின் மூன்றாவது கூட்டத்தொடர் மார்ச் 4ஆம் நாளில் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளன.
இவ்விரு கூட்டத் தொடர்களுக்கான அதிகாரப்பூர்வ செய்தி மையம் பெய்ஜிங்கில் பிப்ரவரி 27ஆம் நாள் துவங்கியது. இம்மையத்தில் இருந்து செய்திகளை வழங்கும் பொருட்டு தற்போதுவரை 3000க்கும் மேற்பட்ட சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.