சீன அரசவை தகவல் தொடர்புப் பணியகம், சீனச் சர்வதேச தகவல் தொடர்புக் குழுமம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் செயலகம் ஆகியவை கூட்டாக நடத்திய 2025ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான நாகரீக உரையாடல் ஜுலை 23ஆம் நாள் தியன்ஜின் மாநகரில் துவங்கியது.
இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 விருந்தினர்கள், கருத்தரங்கு, கலந்துரையாடல், சீனாவின் பொருள் சாராப் பண்பாடுகளை அனுபவித்தல், கையெழுத்துப் படைப்புகள் கண்காட்சி முதலியவை மூலம், இவ்வமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையேயான நாகரிக பரிமாற்றத்தை ஆழமாக்கி, மக்களுக்கிடையேயான தொடர்பை விரைவுபடுத்தி, மேலும் நெருங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தைக் கூட்டாக முன்னேற்றப் பாடுபடுவர். அதே நாள், கூட்டு டிஜிட்டல் நாகரீக பொது எதிர்கால சமூகம்: சீனாவின் ஆலோசனை மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எதிர்காலம் என்ற தலைப்பிலான அறிக்கையும் வெளியிடப்பட்டது