“இன்று நள்ளிரவு பூமியைத் தாக்கும் சூரிய புயல்?” உலகிற்கு விடுக்கப்பட்ட பகீர் எச்சரிக்கை…. அலறும் விண்வெளி நிறுவனங்கள்….!! 

Estimated read time 1 min read

சூரியனின் காந்தப்புலத்தில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான வெடிப்பு காரணமாக, இன்று நள்ளிரவு பூமியை ஒரு சக்திவாய்ந்த சூரிய புயல் (Geomagnetic Storm) தாக்கக்கூடும் என்று விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த அசுர சூரிய புயலின் காரணமாக பூமியில் உள்ள செயற்கைக்கோள் தொடர்புகள், ஜிபிஎஸ் (GPS) சிக்னல்கள், மொபைல் நெட்வொர்க்குகள் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

விண்வெளியில் இருந்து வரும் இந்த ஆபத்தான காந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்திற்குள் ஊடுருவத் தொடங்குவதால், உலக அளவில் தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவிலான குளறுபடிகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்தச் சூரிய புயலின் காரணமாக வான்வெளியில் ‘அரோரா’ (Aurora) எனப்படும் கண்கவர் வண்ண ஒளிகள் தோன்றும் ஒரு அரிய விநோத சம்பவமும் அரங்கேற உள்ளது.

வழக்கமாக அலாஸ்கா, நார்வே, கனடா போன்ற துருவ நாடுகளின் வானத்தில் மட்டுமே தென்படும் இந்த வண்ண ஒளிகள், இம்முறை புயலின் வீரியம் மற்றும் தீவிரம் மிக அதிகமாக இருப்பதால், இந்தியாவின் லடாக் போன்ற வட இந்தியப் பகுதிகளிலும் இன்று நள்ளிரவு தென்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த விண்வெளி அப்டேட், பொதுமக்கள் மற்றும் வானியல் ஆர்வலர்கள் மத்தியில் தற்சமயம் மிகப்பெரிய பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author