கார்த்தி -மோகன் ராஜா புதிய படம்: பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட அறிவிப்பு  

Estimated read time 1 min read

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, பிரபல இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து தனது அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சிரஞ்சீவி நடித்த ‘காட்ஃபாதர்’ திரைப்படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து மோகன் ராஜா மீண்டும் இயக்கும் படம் என்பதாலும், இவர்கள் இருவரும் முதன்முறையாக இணைவதாலும் இந்த திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்திரைப்படத்தை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லட்சுமணன் குமார் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்.
ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாக்கப்பட உள்ளது.
இப்படத்தின் கூடுதல் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author