யாங்சி ஆற்று மூலப் பகுதியில் 2026 அறிவியல் ஆய்வு தொடக்கம்

சீன நீர்வள அமைச்சகத்தின் சாங்ஜியாங் நீர்வளக் ஆணையத்தைச் சேர்ந்த சாங்ஜியாங் ஆற்று அறிவியல் ஆய்வு கழகத்தின் தலைமையில், 2026ஆம் ஆண்டு யாங்சி ஆற்று மூலப் பகுதியிலுள்ள பன்னோக்க அறிவியல் ஆய்வு ஆகஸ்ட் 2ஆம் நாள் சிங்காய் மாநிலத்தின் யூஷு திபெத் இனத் தன்னாட்சி சோவில் தொடங்கியது. ஒரு வாரம் தொடரும் இந்த ஆய்வுப் பயணத்தில், ஆய்வுக் குழுவினர்கள் கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்துக்குச் சென்று, யாங்சி ஆற்று மூலப் பகுதிக்கான முறைமை சார் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

நடப்பாண்டின் அறிவியல் ஆய்வு மற்றும் கண்காணிப்பு முறைமை முன்பை விட முழுமையாக இருக்கும். இதில் நீரிலுள்ள ரேடான் மீதான கண்காணிப்பு மேற்கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

யாங்சி ஆறு பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துக்கு அறிவியல் ஆதரவு அளிக்கும் சிறப்பு நிறுவனமாக, சாங்ஜியாங் ஆற்று அறிவியல் ஆய்வு கழகம் பெருவாரியான அடிப்படை தரவுகளையும் தகவல்களையும் சேமித்துள்ளது. நடப்பு அறிவியல் ஆய்வானது, யாங்சி ஆறு பாதுகாப்பு, சான்ஜியாங்யுவான் தேசிய பூங்காவின் கட்டுமானம், யாங்சி ஆற்று மூலப் பகுதியில் நீர்வள மற்றும் இயற்கை சூழல் பரிணாம முறை ஆய்வு ஆகியவற்றுக்கு அடிப்படை தரவுகளை வழங்கும்.

You May Also Like

More From Author