மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நடிகை திரிஷா..!

Estimated read time 1 min read

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள இல்லத்தில் பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் அது பலனளிக்காமல் உயிரிழந்தார்.

எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் பாக்கியராஜ் பல சிறு பட்ஜெட் படங்களின் விழாவுக்கெல்லாம் முதல் ஆளாக சென்று அந்த படங்களை வாழ்த்தியும் வாழவைத்தும் வந்த திரைக்கதை மேதையை இனிமேல் அந்த மேடைகளில் பார்க்க முடியாதே என திரை பிரபலங்கள் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளனர்.

இயக்குநர் பாக்யராஜின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காகச் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் முதல்வர் விஜய், ரஜினிகாந்த், உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின்,கனிமொழி உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகை திரிஷாவும் இன்று பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்தார்.

வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள அவரது இல்லத்திற்கு வந்த திரிஷா, மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜின் உடலுக்கு மலர் மாலை வைத்து, கைகளை கூப்பி மிகுந்த மனவேதனையுடன் தனது அஞ்சலியை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பாக்யராஜின் மனைவி பூர்ணிமா பாக்யராஜ், மகன் சாந்தனு மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்துத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

You May Also Like

More From Author