கடல்.

Estimated read time 0 min read

Web team

IMG_20240607_175235_075.jpg

கடல்!

கவிஞர் இரா .இரவி !

மீனவர்களின் அட்சயப்பாத்திரம் இன்று
மீனவர்களுக்கு அச்சம் தரும் பாத்திரமானது !

உயிரைப் பணயம் வைத்துக் கடல் பயணம்
ஓடி வந்து கைது செய்கிறான் சிங்களன் !

குருவி சுடுவது போல சுடுகின்றான் அல்லது
கூண்டோடு கூட்டிச் செல்கிறான் சிங்களன் !

அலைகடலில் ஏதடா எல்லை இதை அவன்
அறியாமல் எல்லைத் தாண்டினோம் என்கிறான் !

ஒரே ஒரு அலை போதும் படகை நகர்த்த
ஓங்கி அடிக்கும் அலையைத் தடுக்க முடியுமா ?

தானம் தந்த கச்சத்தீவில் ஆக்கிரமிப்பு
தமிழன் தலை தெரிந்தால் துப்பாக்கிச் சூடு !

வலைகள் உலர்த்து உரிமை உண்டு என்றபோதும்
வீம்பு செய்து தடுக்கின்றான் சிங்களன் !

தட்டிக் கேட்க நாதியில்லை என்ற காரணத்தால்
தலை கால் புரியாமல் ஆடுகிறான் சிங்களன் !

வாழ்வாதாரமாக விளங்கும் கடலில் மீனவர்கள்
வாழ்வை முடித்து விடுகிறான் சிங்களன் !

சுடுவதும் சிறைப்பிடிப்பதும் தொடர்கதையானது
சுடுகாடாகக் கடலை மாற்றிவிட்டன சிங்களன் !

நவீன ஆயுதங்கள் இந்தியாவிடம் இரவல் பெற்று
நம் மீனவரை ஈவு இரக்கமின்றிச் சுடுகிறான் !

இலங்கையில் ஆட்சி மாறியபோதும்
இன்னும் கொலைக் காட்சி மாறவில்லை !

இலங்கை நமக்கு என்றும் நட்பு நாடு அல்ல
எம்இனத்தைக் கொடூரமாக அழித்த பகை நாடே !

உலக ரவுடி என கடல் வலம் வருகிறான்
ஒருவரும்இவனை அடக்க முன்வரவில்லை !

மீனவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியானது
மீண்டும் வசந்தம் மீனவருக்கு எப்போது வரும் !

கொடிய பாம்புக்குப் பால் வார்ப்பதைப் போல
கோடிகளை அள்ளி வழங்குவதை நிறுத்துங்கள் !

கடிதங்கள் எழுதுவதால் எந்தபயனும் இல்லை
கடைசியாக இலங்கைக்கு எச்சரிக்கை விடுங்கள் !

தமிழர்கள் மேல் இனி சிங்களன் கை வைத்தால்
தன்னிகரில்லா இந்திய இராணுவம் சுட வேண்டும் !

Please follow and like us:

You May Also Like

More From Author