கடந்த 2022 ஆம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் போட்டிக்குக் திரும்பிய கிரிக்கெட், தற்பொழுது தொடங்கவுள்ள 2026 கிளாஸ்கோ தொடரில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலுமே கிரிக்கெட் போட்டி இடம்பெறாது என்று போட்டி அமைப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
காமன்வெல்த் விளையாட்டு 2026: கிரிக்கெட் நீக்கப்படக் காரணம் என்ன?
