தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக்கொள்கையின்படி, இனி மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது.
இது நடப்பு ஆண்டு முதலே அமல்படுத்தப்பட்ட உள்ளது. சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த நிகழ்வின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலத்திற்கான புதிய கல்விக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
புதிய கொள்கையின்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே இனி பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்படுத்தினார்.
கூடுதலாக, 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கும் கொள்கையை அரசு தொடரும் என உறுதியளித்துள்ளார்.
இனி தமிழகத்தில் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது
