சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய வெளியுறவு விவகார ஆணையத்தின் அலுவலகத்தின் இயக்குநர் வாங்யீ ஜூலை 25ஆம் நாள் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் உயர்நிலை பிரதிநிதிகளின் 13ஆவது கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
அப்போது வாங்யீ கூறுகையில், உலகப் பாதுகாப்பு அறைகூவல்களை சமாளித்து, பாதுகாப்பு இன்னல்களைத் தாண்டுவதில் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளிக்கும் அடிப்படையில் ஊன்றி நிற்க வேண்டும். ஐ.நா சாசனத்தின் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பன்னாடுகள் தத்தமது அரசியல் அமைப்பு முறை மற்றும் வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் நியாயமான பாதுகாப்புக் கவனத்தையும் மதிக்க வேண்டும் என்றார்.
மேலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளித்து சர்வதேச பாதுகாப்பு அறைகூவல்களைச் சமாளிப்பதில் சீனா பிரிக்ஸ் கூட்டாளிகளுடன் இணைந்து, மேலதிக பயனுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொள்ள விரும்புவதையும் வாங்யீ சுட்டிக்காட்டினார்.
இக்கூட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு அச்சுறுத்தல், பயங்கரவாத எதிர்ப்பு, இணையப் பாதுகாப்பு, உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, எரியாற்றல் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்துக்கள் ஆழமாக பரிமாறிக்கொள்ளப்பட்டன.