தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையை (State Education Policy – SEP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
இது, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக உருவாக்கப்பட்டு, தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக கல்வித் துறையில் தமிழ்நாடு எடுக்கும் ஒரு முக்கியப் படியாக பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி டி. முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மாநிலக் கல்விக் கொள்கை குறித்து பரிந்துரைகள் கொண்ட அறிக்கையை கடந்த ஆண்டு அரசுக்கு சமர்ப்பித்தது.
அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட புதிய கொள்கை, தேசிய கல்விக் கொள்கையை நேரடியாக ஏற்க மறுக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை நிலைப்படுத்துகிறது.
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டது
