தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் தற்போது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
அந்த வகையில் தமிழகத்தின் பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ளார். இவர் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அதிரடியாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிகாரப்பூர்வ ஆதரவு கொடுத்துள்ளது. நாளை மறுநாள் தமிழகம் வரும் மோடியின் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலையில் தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகளை இணைக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் தன் பலத்தை நிரூபிக்கும் பியூஸ் கோயல் அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார். மேலும் தேமுதிக உடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஒரு செய்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
