14ஆவது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தின் போது, சீனாவின் எண்ணியல் துறையின் அடிப்படை வசதிக் கட்டுமானம் மாபெரும் முன்னேற்றமடைந்துள்ளது. மேலும், சீனாவின் எண்ணியல் துறை அடிப்படை வசதியின் அளவும் தொழில் நுட்பமும் உலகளவில் முன்னணியில் உள்ளன என்று சீனத் தேசிய தரவுப் பணியகத்தின் தலைவர் லீயூ லெய்ஹோங் 14ஆம் நாள் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டின் ஜூன் திங்கள் இறுதி வரை, 5ஜி தளங்களின் மொத்த எண்ணிக்கை 45 இலட்சத்து 50 ஆயிரமாகும். ஜிகாபைட் அகன்ற அலைவரிசையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 22 கோடியே 60 இலட்சமாகும். கணக்கீட்டு திறன் உலகின் 2ஆவது இடத்தைப் பிடித்து, பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சியை வலிமையாக முன்னேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.