காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்தை உறுதியாக எதிர்க்க வேண்டுமென 10ஆம் நாள் நடைபெற்ற பாதுகாப்பவையின் அவசர கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி ஃபுஸிவுங் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், காசா மோதல் 22 மாதங்களாக நீடித்து 61ஆயிரத்துக்கும் அதிகமான உள்ளூர் மக்களின் உயிரிழப்பையும் வரலாற்று காணாத மனிதநேய நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடுமையான பேரிடர் ஏற்படுவதற்கு முன், சர்வதேச சமூகம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
காசாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்தல், மனித நேய நெருக்கடியைத் தணித்தல், இரு நாடுகள் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை முன்னேற்றி இறுதியில் பாலஸ்தீன பிரச்சினையின் பன்முகமான நியாயமான மற்றும் நிலையான தீர்வை நனவாக்கச் சீனா சர்வதேச சமூகத்துடன் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.