ஷாங்காய் மாநகரில் 19ஆம் நாளில் தொடங்கிய 2025 கொள்கலன் இன்டர்மோடல் ஆசியா கண்காட்சி வெளியிட்ட புதிய தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு சீனாவில் மொத்த கொள்கலன் உற்பத்தி எண்ணிக்கை 81 இலட்சத்தை தாண்டியுள்ளது.
இது, 2023ஆம் ஆண்டை விட 268.2 விழுக்காடு அதிகரித்து, வரலாற்றில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இக்கண்காட்சியில் 60க்கும் மேலான நாடுகளின் நூற்றுக்கணக்கான வணிகர்களும் நிபுணர்களும் கலந்துகொண்டனர்.
உலகளாவிய வர்த்தக மாற்றத்தில் கவனம் செலுத்தல், கடல் போக்குவரத்து சந்தையின் முன்னேற்றம், சரக்குக் கொள்கலன் வினியோக சங்கிலி உள்ளிட்டவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டுள்ளன.