ஹைனான் தாராள வர்த்தக துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவு முழுவதும் சிறப்புச் சுங்க கொள்கை புத்தாக்க நடவடிக்கையாகும். இது ஹைனான் மாநிலம் வெற்றி பெறுவதற்குரிய அடிப்படையாக அமைந்துள்ளதோடு, சீன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களுக்கு மேலதிகமான வணிக வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சக்கரோவா 18ஆம் நாள் தெரிவித்தார்.
அதே நாளில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும்
கூறுகையில், ஹைனான் தாராள வர்த்தக துறைமுகம் மற்றும் பிற தாராள வர்த்தக மண்டலங்களை சீனா நிறுவியது என்பது வெளிநாட்டு வர்த்தகத்தை விரைவுபடுத்தி, வெளிநாட்டு வர்த்தகக் கட்டமைப்பை மேம்படுத்தி வெளிநாட்டு வர்த்தகத்தின் பல்வகை தன்மையை முன்னேற்றும் பயனுள்ள நடவடிக்கையாகும். ரஷியாவும் சீனாவும் சிறப்புப் பொருளாதார மண்டலம் சார்ந்த ஒத்துழைப்புகளை மேற்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன என்றார்.
