ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பிறகு ஆறு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் மீறுவதாக கேரள திரைப்பட தியேட்டர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சினிமா என்பது அனைவருக்கு பிடித்தமான ஒன்று. அனைவர்க்கும் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த காலா கட்டத்தில் படம் பார்ப்பதற்கான வசதியாக என்றால் அது திரையரங்குகள் மட்டுமே இருந்தது.
மக்கள் கூட்டக் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பார். அதன் பின்னர் தொலைக்காட்சி வந்தது. திரையரங்கில் வெளிவந்து ஒரு வருடலுக்கு மேல் ஆனா படங்களை தொலைகாட்சியில் ஒளிபரப்புவார்கள், திரையரங்கில் தவறவிட்ட படங்களை தொலைக்காட்சியில் பார்ப்பவர்களும் உண்டு.
அதன் பின் தற்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன் வந்தது. பின்னர் சிலர் திருட்டு தனமாக படங்களை போனில் இறக்கி பார்க்க தொடங்கினர். அதன் பின்னர் படத்தின் உரிமையாளர்கள் பணம் கொடுத்தால் போனில் படம் பார்க்கலாம் என்பதை ஓடிடி மூலம் அறிமுகபத்தினர்.
அப்படி ஓடிடி வந்ததிலிருந்த்து திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கும் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பெரிய நடிகர்களின் படம் வந்தால் மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு சென்றனர்.
தியேட்டர்களுக்கு வந்து திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். தெலுங்குத் திரையுலகம் மட்டும் ஓரளவிற்கு தாக்குப் பிடிக்கிறது என்று சொல்கிறார்கள்.
அதே சமயம் நல்ல படங்களைக் கொடுக்கும் மலையாளத் திரையுலகத்திலும் தியேட்டர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள். ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பிறகு ஆறு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் மீறுவதாக கேரள திரைப்பட தியேட்டர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அது மட்டுமல்லாது வருமானத்தைப் பகிர்வது, புராஜக்டர்களை தியேட்டர்களில் நிர்மாணிப்பது உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்தும் கடந்த ஆறு மாத காலமாக தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
சில தயாரிப்பாளர்கள் திரைத்துறையை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். தியேட்டர் ஓனர்களை மிரட்டுகிறார்கள் என்றும் தியேட்டர்கள் சங்கத்தினர் சார்பில் முன்வைக்கப்படுகிறது.
இதற்கான தீர்வுகள் கிடைக்கும் வரை பிப்ரவரி 22ம் தேதி முதல் புதிய படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என்றும் அறிவித்துள்ளார்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தை நாளை நடைபெறலாம் எனத் தெரிகிறது.
தமிழில் புதிய படங்கள் வெளியான 4 வாரங்களுக்குள் ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. அதற்கு தமிழக தியேட்டர்கள் சங்கத்தினர் ஏற்கெனவே எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார்கள்.
ஹிந்தியில் மட்டும் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிடுகிறார்கள். அப்படி ஒப்பந்தம் போடாத படங்களை தங்களது மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அந்த சங்கத்தினர் திரையிடுவதேயில்லை.