மின்சார வாகனத் தொழிலின் சீரான வளர்ச்சியையும் உலகளாவிய பசுமை மாற்ற ஒத்துழைப்பையும் பாதுகாப்பதற்காக, அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்சார வாகனங்களின் சலுகைக்கு எதிரான தற்காலிக வரி வசூலிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, உலக வர்த்தக அமைப்பின் தகராறுகளைத் தீர்க்கும் அமைப்பைச் சீனா நாடியுள்ளது. சீன ஊடகக் குழுமம் உலகம் முழுவதிலும் மேற்கொண்ட இணையக் கருத்துக்கணிப்பின் படி, கூடுதல் சுங்கவரி விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல், சீனாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை அகற்ற முடியாது. அது மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வாகனத் தொழிலின் ஆரோக்கியமான வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று 87.5 விழுக்காட்டினர் சுட்டிக்காட்டினர்.
அரசு மானியங்களை நம்புவதற்கு பதிலாக, போதுமான சந்தை போட்டி மற்றும் விரைவான தொழில்நுட்ப மாற்றம் ஆகியவை சீனாவின் மின்சார வாகனத் துறையின் வேகமான வளர்ச்சிக்குக் காரணம் என்று 78.42 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.