இந்தியாவில், ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில், அமாவாசை முடிந்து 4-வது நாளில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.
இது நாடு முழுவதும் மிகவும் பிரம்மாண்ட விழாவாக கொண்டாப்படுகிறது.
இந்த நாளில், புதிதாக விநாயகர் சிலை செய்து வழிபாட்டு, 3 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை அவற்றிற்கு பூஜைகள் செய்து, பின்னர் அந்த சிலைகளை தண்ணீரில் கரைத்துவிடுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி தினம் எப்போது முதல் கொண்டாப்படுகிறது என்ற தகவல் சரியாக தெரியவில்லை என்றாலும், 16ஆம் நூற்றாண்டில், மகாராஷ்டிராவை ஆண்ட சத்திரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் விநாயகர் சதூர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது என வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.
விநாயகர் சதுர்த்தியின் வரலாறு தெரியுமா?
