தமிழக ஹோட்டல் சங்கம் பெப்சி, கோக் உள்ளிட்ட அமெரிக்கா பொருட்களை புறக்கணிக்க முடிவு  

Estimated read time 0 min read

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்ததைத் தொடர்ந்து, தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அமெரிக்கப் பொருட்களை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
இந்த முடிவை சங்கத் தலைவர் வெங்கடசுப்பு இன்று செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
அமெரிக்கா, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளதால் இந்த முடிவு என அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, அமெரிக்க நிறுவனங்களான பெப்சி, கோக் உள்ளிட்டவற்றின் தயாரிப்புகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டதாகவும், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மினரல் வாட்டர் பாட்டில்களும் இதற்குள் அடங்கும் எனவும் கூறினார்.
இதற்கு மாற்றாக, “இந்தியாவில் தரமான மாற்று தயாரிப்புகள் கிடைக்கின்றன. அவற்றையே பயன்படுத்துவோம்,” என வெங்கடசுப்பு தெரிவித்தார்.

You May Also Like

More From Author