இந்திய ரயில்வே தனது வரலாற்றிலேயே மிக முக்கியமான டிஜிட்டல் புரட்சியை நோக்கி நகர்ந்துள்ளது.
கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வரும் சுமார் 40 ஆண்டுகள் பழமையான பயணிகள் முன்பதிவு அமைப்பை மாற்றிவிட்டு, புதிய அதிநவீன தொழில்நுட்பக் கட்டமைப்புக்கு ரயில்களை மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் இந்த புதிய முன்பதிவு முறை படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி ரயில் பவனில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆய்வு செய்தார்.
இந்த மாற்றத்தின் போது பயணிகளுக்கு எவ்வித ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தடங்கலும் ஏற்படக்கூடாது என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரயில் பயணிகளுக்கு அப்டேட்:ஆகஸ்ட் முதல் மாறும் 40 வருட பழைய டிக்கெட் சிஸ்டம்
