முழு சக்தியையும் பயன்படுத்த தொடங்கி விட்டது பாரதம் : குடியரசு துணைத்தலைவர் தன்கர்

Estimated read time 1 min read

அனைத்து துறைகளிலும் பாரதம் தனது முழு  சக்தியைப் பயன்படுத்தத்  தொடங்கி விட்டததாக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

அனைத்து அம்சங்களிலும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், இந்தியா என்பது அதன் ஆற்றலால்  வரையறுக்கப்பட்ட தேசம் மட்டுமல்ல, அதன் ஆற்றலை உணர்ந்து கொள்ளும் நாடாக தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணை தலைவர் தன்கர் பங்கேற்று உரையாற்றினார்.  அப்போது இந்தியா போதுமான சக்தியைப் பெற்றிருந்தும், அதனை வெளிப்படுத்தாமல்  இருந்தது. ஆனால் தற்போது முழு அளவில் சக்தியை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டது என அவர் தெரிவித்தார். தற்போது அனைத்து துறைகளும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் கட்டண முறையால் தூண்டப்பட்ட நமது நிதி சூழல் அமைப்பு உலகளாவிய மாதிரியாக மாறியுள்ளது. நாம் அதைப் பயன்படுத்துவது  மட்டுமல்லாமல், அதை ஏற்றுமதி செய்கிறோம்,என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லியில்  நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு இந்தியாவின் தலைமைக்கு ஒரு சான்று என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் பங்கேற்புக்கான இந்தியாவின் உறுதிப்பாடு தற்போது எவ்வாறு உலகளவில் எதிரொலிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author