திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
படுகாயம் அடைந்த அவர் எஸ்எஸ்கேஎம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் எப்படி காயமடைந்தார் என்பதை அக்கட்சி வெளியிடவில்லை.
ஆனால் இந்தியா டுடே டிவி தெரிவித்ததன்படி, மேற்கு வங்க முதல்வர், அவரது வீட்டில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டரை சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் அவசரமாக தரையிறக்க நேரிட்டதால் காலில் காயம் ஏற்பட்டது.
அதில் அவரது இடது முழங்கால் மூட்டு மற்றும் இடது இடுப்பு மூட்டு ஆகியவற்றில் தசைநார் காயம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.