இந்திய துப்பாக்கி சுடுதல் அணிக்கு 19 ஆண்டுகளாக பயிற்சியாளராக இருந்தவர் கேரளாவை சேர்ந்த சன்னி தாமஸ். இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். சன்னி தாமஸுக்கு 85 வயது ஆகிறது.
சன்னி தாமஸ் தலைமையில் இந்திய அணி 108 தங்கம், 74 வெள்ளி, 53 வெண்கல பதக்கங்களை பல்வேறு தொடர்களில் வென்று சாதனை படைத்துள்ளது.
இதில் மூன்று ஒலிம்பிக் பதக்கங்களும் அடங்கும். சனி தாமசுக்கு கடந்த 2001-ஆம் ஆண்டு இந்திய அரசு துரோணாச்சாரியார் விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
