கோல்ட் கார்டு விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்  

Estimated read time 1 min read

அமெரிக்காவின் குடியுரிமை பெறும் விசா திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், வசதி படைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான புதிய கோல்ட் கார்டு விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, தனிநபர்கள் $1 மில்லியன் கட்டணம் செலுத்தி அமெரிக்காவின் நிரந்தர வசிப்பிட அட்டையை (கிரீன் கார்டு) பெறலாம்.
அதேபோல், நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஸ்பான்சர் செய்வதற்காக, ஒரு ஊழியருக்கு $2 மில்லியன் செலுத்த வேண்டும்.
இந்த புதிய திட்டம், EB-1 மற்றும் EB-2 எனப்படும் வேலை அடிப்படையிலான கிரீன் கார்டு வகைகளுக்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமெரிக்க கருவூலத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்கள் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author