பல்கேரியாவைச் சேர்ந்த பிரபல முன்கணிப்பாளர் பாபா வங்காவின் 2026-ம் ஆண்டுக்கான கணிப்புகள் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
அவரது ஆதரவாளர்களின் கூற்றுப்படி, 2026-ல் மூன்றாம் உலகப் போர், வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களைக் கட்டுப்படுத்தும் வலிமை, மற்றும் பயங்கர இயற்கைப் பேரிடர்களால் பூமியின் 7-8% நிலப்பரப்பு அழியும் என பாபா வங்கா கணித்துள்ளார்.
இந்த கணிப்புகள் உண்மையாகுமா என்பது தெரியவில்லை என்றாலும், அவரது முந்தைய கணிப்புகள் பல சரியாகியுள்ளதாக ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
பாபா வங்காவின் மிகவும் பயமுறுத்தும் கணிப்பு, 2026-ல் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்பதாகும். இந்தப் போர் கிழக்கிலிருந்து தொடங்கி மேற்கு நாடுகளை பாதிக்கும் எனவும், இதில் ரஷ்ய அதிபர் புதின் உலகின் மிகப்பெரிய தலைவராக உருவாவார் எனவும் அவர் கூறியதாகத் தெரிகிறது.
இது ரஷ்யா-அமெரிக்கா மோதலுடன் தொடர்புடையதாகவும், சீனாவின் தைவான் மீதான ஆதிக்கத்துடனும் இணைக்கப்படுகிறது. மேலும், 2026 நவம்பரில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு ஒரு பிரம்மாண்ட விண்கலத்தில் வருவார்கள் எனவும் அவர் கணித்துள்ளார், இது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாபா வங்காவின் மற்றொரு முக்கிய கணிப்பு, 2026-ல் செயற்கை நுண்ணறிவு (AI) மிகவும் மேம்பட்டு, மனிதர்களின் வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்படுத்தத் தொடங்கும் என்பதாகும். வேலை முதல் தனிப்பட்ட உறவுகள் வரை AI-இன் தாக்கம் அதிகரிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். இதுதவிர, பயங்கரமான பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், மற்றும் காலநிலை மாற்றங்களால் பூமியின் 7-8% நிலப்பரப்பு அழியும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த கணிப்புகளை ஆதரவாளர்கள் தீவிரமாக நம்பினாலும், விமர்சகர்கள் இவை வெறும் தற்செயல் நிகழ்வுகளாக இருக்கலாம் என வாதிடுகின்றனர்.