சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 18ஆம் நாள் புதுதில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்புக்குமிடையே 10 ஒத்த கருத்துக்கள் உருவாகியுள்ளன.
இரு நாட்டுத் தலைவர்களின் நெடுநோக்கு வாய்ந்த வழிகாட்டல் சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்கு ஈடிணையற்ற முக்கிய பங்களிக்குமென இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன. மேலும், தியென்ஜின் நகரில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பங்கேற்பதை வரவேற்பதாக சீனா தெரிவித்துள்ளது. தலைமை பொறுப்பை ஏற்கும் பரஸ்பர தூதாண்மை நிகழ்வுகளுக்கு ஒன்றுக்கொன்று ஆதரவளிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
தொடர்ந்து ஒன்றுக்கொன்று ஆதரவளித்து சீன-இந்திய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. சீனப் பெருநிலப்பகுதி மற்றும் இந்தியாவுக்கான நேரடி விமான சேவையைக் கூடிய விரைவில் மீண்டும் துவக்கவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன என்று இந்த ஒத்த கருத்துக்களில் அடங்கும்.
