அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வின்படி, வேற்று கிரகவாசிகள் பூமியின் தகவல்தொடர்புகளைக் கேட்கக்கூடும் எனத் தெரிய வந்துள்ளது.
Astrophysical Journal Letters என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பூமிக்கும் விண்கலங்களுக்கும் இடையே அனுப்பப்படும் ரேடியோ சிக்னல்கள் அனைத்தும் கிரகங்களால் உறிஞ்சப்படுவதில்லை என்று கூறுகிறது.
இந்த சிக்னல்களில் ஒரு பகுதி விண்வெளியில் தொடர்ந்து பயணித்து, வேற்று கிரக வாசிகளை சென்றடைய வாய்ப்புள்ளது.
ஆய்வின் முன்னணி ஆசிரியரான பின்சென் ஃபான், கிரகங்கள் நேர்கோட்டில் அமையும்போது, சிக்னல்கள் மிகவும் வலுவாக இருக்கும் என்று விளக்கினார்.
வேற்று கிரகவாசிகள் பூமியின் தகவல்தொடர்புகளைக் கண்டறியலாம்: ஆய்வு தகவல்
