டிராகன் ஆண்டுக்கான சிறப்பு அஞ்சல்தலை வெளியீடு

டிராகன் ஆண்டுக்கான சிறப்பு அஞ்சல்தலையை சீன அஞ்சல் நிறுவனம் ஜனவரி 5ஆம் நாள் வெளியிட்டது. 2 உருவங்களைக் கொண்ட இந்த அஞ்சல்தலை, சிவப்பு, பொன் மற்றும் கருப்பு ஆகிய 3 நிறங்களில் உள்ளது.


வீரியத்துடன் பறந்து செல்லும் டிராகன் உருவமுடைய அஞ்சல்தலை, வலிமையுடன் விடா முயற்சி செய்யும் எழுச்சியை வெளிப்படுத்துகிறது.

சீனாவின் பாரம்பரிய மங்கலகரமான உருவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட 2ஆவது வகை அஞ்சல்தலை, நல்ல காலநிலை, நாட்டின் செழுமை மற்றும் அமைதியான வாழ்க்கையின் மீதான விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.

You May Also Like

More From Author