731 என்ற திரைப்படம் அண்மையில் திரையிடப்பட்டது. ஆனால், ஜப்பானின் 731 படை தொடர்பான வரலாற்று தகவல்களை, உலகின் வரலாற்று நினைவுகள் பட்டியலில் சேர்ப்பதற்கான பணிகள், கடந்த 6 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட வில்லை.
2017ம் ஆண்டு, சீனா, தென்கொரியா முதலிய பல நாடுகள், ஜப்பானால் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தப்பட்ட பெண்கள் தொடர்பான ஆவணத்தை, அந்த பட்டியலுக்கு விண்ணப்பித்துள்ளன. ஆனால், ஜப்பான் எதிர்ப்பு கருத்து தெரிவித்ததன் காரணமாக, சீனா உள்ளிட்ட நாடுகளின் விண்ணப்பம் கால வரம்பின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
சர்வதேச விதிமுறைகளை சீனா பின்பற்றி வருகிறது. ஜப்பானின் வலது சாரி சக்தி, சொந்த நம்பிக்கையைப் பலிகொடுத்து, சர்வதேச விதிமுறைகளைக் காலால் மிதித்து வருகிறது.