இந்தியாவின் எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கான புதிய காலக்கெடுவை இஸ்ரோ தலைவர் சோமநாத் வெளியிட்டுள்ளார்.
  மனிதர்கள் கொண்ட திட்டமான ககன்யான் 2026இல் தொடங்கப்படும் என அறிவித்துள்ள அவர், அதே நேரத்தில் சந்திரனுக்கு சென்று மாதிரி திரும்பும் திட்டமான சந்திரயான் 4, 2028இல் தொடங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
  மேலும், அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு முயற்சியான நிசார் 2025இல் தொடங்கும்.
  ஆல் இந்தியா ரேடியோவில் நடந்த சர்தார் படேல் நினைவு சொற்பொழிவில் பேசும் போது சோமநாத் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
  இதேபோல், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் (ஜாக்ஸா) இணைந்து நிலவில் இறங்கும் பணியான சந்திரயான்-5க்கான திட்டங்களையும் சோமநாத் வெளிப்படுத்தினார்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                