“ஐந்து நாள் தொடர் விடுமுறை”: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!! 

Estimated read time 1 min read

ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி சரஸ்வதி பூஜை, அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி என தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் அரசு விடுமுறை அமைகிறது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 4 மற்றும் 5-ம் தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறையாகும். இந்த இடைவெளியில் அக்டோபர் 3-ம் தேதி மட்டும் பணி நாளாக இருந்ததால், அந்த நாளும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என ஊழியர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கோரிக்கையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு அக்டோபர் 3-ம் தேதி வெள்ளிக்கிழமையையும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. இதனால் அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இந்த அறிவிப்பு மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author