இந்தியப் பெருங்கடலைக் கடந்த கலை மற்றும் இலக்கியம் பற்றிய சர்வதேச கருத்தரங்கம்செப்டம்பர்
26ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை பீக்கிங் பல்கலைக்கழகத்தில்
நடைபெற்றது. இதில்
இதில், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றைச் சேர்ந்த 15 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்
மற்றும் 40க்கும் மேற்பட்ட சீன
பல்கலைக்கழகளின் 90க்கும் மேற்பட்ட நிபுணர்கள்
மற்றும் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களை ஒன்றிணைத்து, பல்துறை உரையாடல் மற்றும்
சர்வதேச கல்வி ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் இந்தக் கருத்தரங்கு, இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாகரிகங்களின்
பரிமாற்றம் மற்றும் பரஸ்பர ஆராய்ச்சியை ஆழப்படுத்தி, கல்வி புத்தாக்கம் மற்றும் பரிமாற்றம் மூலம் உலகளாவிய நாகரிக
முன்மொழிவை செயல்படுத்தும் மாதிரியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக்
கருத்தரங்கத்தின் போது, நவீன இலக்கியம், கலாச்சார பாரம்பரிய பாதுகாப்பு உள்ளிட்ட 12 துணை மன்றங்களும், திரைப்படம், இசை மற்றும் கலாச்சாரம் தொடர்பான
சிறப்பு நிகழ்ச்சிகளும்
நடத்தப்பட்டன.