இலங்கையின் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக திடீர் விசிட் அடித்த அஜித் தோவல்  

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே மற்றும் பிற தலைவர்களை கொழும்பில் சந்தித்தார்.

மேலும், செப்டம்பர் 21ஆம் தேதி அங்கு நடக்க உள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பரந்த அளவிலான அரசியல் ஆலோசனைகளை நடத்தினார்.

விக்ரமசிங்கே தவிர பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் மார்க்சிஸ்ட் ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இவர்களில் குணவர்தன தவிர, மற்ற அனைவரும் ஜனாதிபதிக்கான போட்டியில் முன்னணியில் உள்ள வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author