மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தனது பொன்விழா ஆண்டை ஒட்டி, தேர்வு முறைகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நேர்மையை மேம்படுத்தும் நோக்கில் பல முக்கிய சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.
இது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான தேர்வர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தேர்வர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தேர்வர்கள் தாங்கள் எழுதிய வினாத்தாள்கள், பதில்கள் மற்றும் சரியான விடைகளை தேர்வு முடிந்த பிறகு பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், தேர்வர்கள் விடைக் குறிப்புகளைச் சரியான ஆதாரங்களுடன் மேல்முறையீடு செய்ய முடியும்.
மேலும், கேள்விகளை மேல்முறையீடு செய்வதற்கான கட்டணமும் ₹100லிருந்து ₹50 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்சி தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம் அறிமுகம்
