2026ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க மானிடப் பண்பாட்டியல் பரிமாற்ற நடவடிக்கை மற்றும் சீன வசந்த விழாவுக்கான கொண்டாட்ட நடவடிக்கையின் துவக்க விழா 24ஆம் நாள் மொரிஷியஸ் தலைநகரிலுள்ள சீனப் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. அந்நாட்டிற்கான சீனத் தூதர் குவாஷ்ஃபான், மொரிஷியஸ் கல்வி மற்றும் பண்பாட்டுத் துணை அமைச்சர் வெரோனிக் லெர் முதலியோர் இதில் கலந்துகொண்டனர்.
சீனத் தூதர் குவாஷ்ஃபான் இதில் உரைநிகழத்தியதாவது
இரு நாடுகளின் எதிர்காலம் தான் இளைஞர்கள் என்றார். சீன-ஆப்பிரிக்க தொடர்பு என்ற தலைப்பிலான இளைஞர்களின் ஏ.ஐ காட்சி கலை போட்டி முதலிய நடவடிக்கைகள் நடைபெறும். இரு நாடுகளின் மானிடப் பண்பாட்டியல் பரிமாற்றம் எதிர்காலத்தை நோக்கி வளர்வது என்பது இந்நிகழ்வின் நோக்கமாகும். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி படைக்கப்பட்ட கலை படைப்புகள் மூலம் சீன-ஆப்பிரிக்க நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கான எதிர்கால வளர்ச்சி வாய்ப்பும் வெளிப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
