நகரங்களுக்கு இடையேயான ரயில்வேயின் சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முன்மொழிவுகள் என்னும் அறிக்கையை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் அண்மையில் வெளியிட்டது.
கொள்கை ரீதியான வழிக்காட்டல் மற்றும் ஆதரவை மேலும் வலுப்படுத்தி, நகரங்களுக்கு இடையேயான ரயில்வேயின் உயர்தர மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்க வேண்டும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்களுக்கு இடையேயான ரயில்வே, 1-2 மணி நேரத்துக்குள்ள பயணம் மேற்கொள்பவர்களின் தேவையைப் பூர்த்தி செய்கின்றது.
