தைவான்அதிகார வட்டாரம் அண்மையில்
“சீனாவைப் பிளவுபடுத்தும் தவறான கருத்துக்களைப்
பரப்புதல்”, “வான் பாதுகாப்பு அமைப்புமுறையைக்
கட்டியமைத்தல்”, “பாதுகாப்பு வரவு செலவுத் தொகையை
அதிகரித்தல்”
முதலிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதோடு, சர்வதேச சமூகம் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளது. இது
குறித்து, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் நடத்திய கருத்துக் கணிப்பின்படி,
ஒரே சீனா என்ற கோட்பாடு சர்வதேச சமூகத்தின் பொது கருத்தாக உள்ளது என்று 89.8
விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். உலகளவில் ஒரே சீனா. தைவான், சீனாவின் உரிமை
பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். இது குறித்து, ஒரே சீனா
என்ற கோட்பாடு மற்றும் 1992ஆம் ஆண்டு எட்டப்பட்டுள்ள பொதுக் கருத்தில் ஊன்றி
நின்றால் தான், தைவான் நீரிணை இரு கரை பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மை
உத்தரவாதம் செய்யப்படும். தைவான் பொருளாதாரம் இரு கரை ஒத்துழைப்புகளின் மூலம்
மேலும் பெரிய வளர்ச்சியடையும் என்று 87.7 விழுக்காட்டினர் தெரிவித்தனர். மேலும், தைவான்
நீரிணை இரு கரை பிரதேசத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மை, ஆசிய-பசிபிக் பிரதேசம்
மற்றும் உலகப் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு மிகவும் முக்கியமானது என்று
92.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
சீனாவுடன்
தூதாண்மை உறவை நிறுவிய நாடுகள் தைவானுடன் எந்த வடிவ அதிகாரப்பூர்வத் தொடர்பும்
மேற்கொள்வதை சீனா எப்போதுமே எதிர்க்கிறது. கருத்துக் கணிப்பில் பங்கெடுத்த 91.1
விழுக்காட்டினர் தெரிவிக்கையில், தைவான் பிரச்சினை சீன மக்களால் தீர்க்கப்பட
வேண்டும். வெளிநாடுகள் இதில் தலையிடக்கூடாது என்று தெரிவித்தனர்.