காசா பகுதியில் போர் நிறுத்தம் பற்றிய சீன வெளியுறவு அமைச்சரின் வேண்டுகோள்

சுவிஸ்கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர் காசிஸுடன் அக்டோபர் 10ஆம் நாள் பெலின்சோனாவில்
இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில்

சீன வெளியுறவு
அமைச்சர் வாங்யீ கூறுகையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்
நிறுத்தத்துக்கான முதல் கட்ட உடன்படிக்கை எட்டியுள்ளது குறித்து கருத்து
தெரிவித்தார்.

வாங்யீ கூறுகையில், அமைதியை மீட்டெடுக்கவும்
உயிர்களைக் காப்பாற்றவும் எடுத்துள்ள அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்பதாக
தெரிவித்தார். அதோடு, அவர் மூன்று வேண்டுகோள்கள் விடுத்தார். முதலாவதாக,
உண்மையான, விரிவான மற்றும் நிலையான போர்நிறுத்தத்தை
அடையவும்
, மனிதாபிமான நெருக்கடியைக் குறைக்கவும், பிராந்திய
நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இரண்டாவதாக,
சர்வதேச சமூகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள
பாலஸ்தீன
மக்களே பாலஸ்தீனத்தை ஆட்சிமுறை செய்ய வேண்டும்
என்ற கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும்.
மூன்றாவதாக, இரு நாடுகள் தீர்வு மாற்றாது என்பதில் ஊன்றி நிற்க வேண்டும் என்று
தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author