2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் சீனாவின் ஆன்லைன் சில்லறை விற்பனை நிலையான வளர்ச்சியைப் பராமரித்து,கடந்த ஆண்டை விட 9.8 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டின் ஆன்லைன் சில்லறை விற்பனை,விற்பனை விளம்பரங்கள் மற்றும் புதிய மின்-வணிக மாதிரிகளால் உந்தப்பட்டு, ஜனவரி-ஜூன் மாத காலகட்டத்தில் மொத்தம் 7.1 டிரில்லியன் யுவானை ஈட்டியது. டிஜிட்டல் தயாரிப்புகளில், ஏ.ஐ. கற்றல் இயந்திரங்களின் ஆன்லைன் விற்பனை கடந்த ஆண்டில் இருந்ததை விட 136.6 விழுக்காடும்,சுற்றுலா சேவைகளின் ஆன்லைன் விற்பனை 59.9 விழுக்காடும் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் மற்றும் நேரடி விற்பனையின் ஒருங்கிணைப்பு மூலம், பிசினஸ்-டு-பிசினஸ் தளங்களின் பரிவர்த்தனை அளவு கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.