குன்லென் பலதுறை ஆய்வு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சி தொடக்கம்

சின்காய் குன்லென் பண்பாட்டுக்கான பல்துறை பன்முக அறிவியல் பயணம் 15ஆம் நாள், சின்காய் மாநிலத்தின் சமூக அறிவியல் கழகத்தில் தொடங்கியது.

உள்ளூர் பிரதேசத்தில் கள ஆய்வு, ஆவணங்களின் தொகுப்பு, தொழில் நுட்ப புத்தாக்கத்தின் மூலம், குன்லென் பண்பாட்டு கூறுகள் மற்றும் சின்னங்களை அமைப்பு ரீதியில் தொகுத்து, சின்காய் மாநிலத்தின் பல தரப்பட்ட சீனப் பண்பாட்டு வரலாறு விரிவாக வெளிப்படுத்தப்படும்.

சின்காய் மாநிலத்தின் சமூக அறிவியல் கழகத்தின் தலைவர் சோ டவாங் ஷ் இத்துவக்க விழாவில் தொடர்புடைய தகவல்களை அறிமுகப்படுத்தினார். இந்த முறை அறிவியல் ஆய்வுப் பணியில், தொல் பொருள் இயல், வரலாற்று இயல், தேசிய இன இயல், நிலவியல், மனித குல இயல், பண்டைய எழுத்துக்கள் இயல், நாட்டுப்புற இயல் முதலிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்.

You May Also Like

More From Author