சீனத்தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி,
இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனாவில் நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின்
பொருளாதாரம் சீரான நிலையில் உள்ளது. அவற்றின் புத்தாக்க உயிராற்றல் குறிப்பிடத்தக்க
முன்னேற்றம் அடைந்துள்ளது.
முதல்
8 மாதங்களில், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு மேல் வருமானமுடைய நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு
மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 7.6 விழுக்காடு அதிகமாகும்.
அதன் அதிகரிப்பு வேகம், பெரிய ரக தொழில் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது 3.3
சதவீதப் புள்ளிகள் அதிகமாகும்.
மேலும்,
நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி தொகை வலிமையாக
வளர்ச்சியடைந்து வருகிறது. ஆகஸ்டு திங்களில், நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களின்
ஏற்றுமதி குறியீட்டு எண் 51.9 விழுக்காட்டை எட்டி, கடந்த 17 மாதங்களாக விரிவாக்க வரம்புக்குள்
இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.