மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் (MGNREGA) எனப் பிரபலமாக அறியப்படும் மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கும், அதன் வரம்பை விரிவுபடுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
MGNREGA திட்டமானது இனி ‘பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா’ (Poojya Bapu Grameen Rozgar Yojna – PBGRY) எனப் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது ‘விக்சித் பாரத் (மேம்பட்ட இந்தியா)’ இலக்குடன் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission(Gramin) VB—G RAM G என்ற மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகிறதா? புதிய திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு
