2029ஆம் ஆண்டு வரை, உலகின் பொது கடன் தொகை,
உலகின் மொத்த உற்பத்தி மதிப்பின் 100 சதவீதத்தைத் தாண்டும்
என்றும் தீவிர நிகழ்வுகளில், மொத்த கடன் தொகை, 123 சதவீதத்தைக் கூட
எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, 1948ஆம் ஆண்டுக்குப்
பிறகு இல்லாத அளவிலான புதிய உச்சமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் அக்டோபர்
15ஆம் நாள் புதிதாக வெளியிட்ட
நிதி கண்காணிப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சர்வதேச நாணய நிதியத்தின்
நிதி விவகாரத் துறை இயக்குநர் விடோர் காஸ்பார் சீன மத்திய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு
அளித்த பேட்டியில், செலவினங்களின் கட்டமைப்பை
மேம்படுத்தி, பயன்திறனை உயர்த்துவதன் மூலம்
நிதி மீள்தன்மையை வலுப்படுத்த பல்வேறு நாடுகள் இப்பொழுதே செயல்படுவது அவசியமானது என்று
தெரிவித்தார். மேலும், நிதிக் கொள்கையை முன்னுரிமை இடத்தில் வைத்து, கடன்களின் தொடர்ச்சித்தன்மையை உறுதிப்படுத்தி, நிதி இடையகங்களை உருவாக்குவதன் மூலம் சாத்தியமான
நிதி நெருக்கடி உள்பட கடுமையான தாக்கத்தைச் சமாளிப்பதற்கு தயாராக பல்வேறு நாடுகள் உடனடியாக
செயல்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தவிரவும், கலந்தாய்வு மற்றும்
ஒத்துழைப்பு மூலம் வர்த்தக சர்ச்சைகளைத் தீர்ப்பதை ஊக்குவிக்கிறோம் என்றும் காஸ்பர்
தெரிவித்தார்.