ஜப்பானின் முன்னாள் தலைமை அமைச்சர் டொமிச்சிமுரயாமின் மறைவு குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜப்பான் தலைமை அமைச்சர்
இஷிப ஷிகெருவுக்கு இரங்கல் செய்தி அனுப்பினார். 
ஷிச்சின்பிங் அனுப்பிய இரங்கல் செய்தியில்,
டொமிச்சி முரயாம், ஜப்பானின் நேர்மையான அரசியல்வாதியும், சீன மக்களின் பழைய
நண்பரும் ஆவார். அவர், நீண்டகாலமாக சீன-ஜப்பான் நட்பு இலட்சியத்துக்குப் பாடுபட்டு
வந்தார் என்றார். மேலும், 1995ம் ஆண்டில் ஜப்பான் தலைமை அமைச்சராக இருந்த அவர்,
ஜப்பாமின் ஆக்கிரமிப்பு போர் மற்றும் ஆக்கிரமிப்பு ஆட்சி வரலாற்றை ஆழமாக மறு ஆய்வு
செய்து, பாதிக்கப்பட்ட நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார். ஜப்பான், சீனாவுடன் நேர்மறைவான திசையை நோக்கிப் பயணித்து, வரலாற்றைப்
படிப்பினையாகக் கொண்டு, எதிர்காலத்துக்கு முகங்கொடுத்து, இரு நாட்டுறவின் அரசியல்
அடிப்படையைப் பேணிக்காத்து, சீன-ஜப்பான் ஒன்றுக்கொன்று நலன் தரும் உறவின்
வளர்ச்சியை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                     
                             
                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                