சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் பிப்ரவரி 5ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டு வசந்த விழாவானது, யுனெஸ்கோவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பட்டியலில் வசந்த விழா சேர்க்கப்பட்டதன் பின் முதன்முறையாக கொண்டாடப்பட்டது.
இதனால் உலகளவில் சுமார் 20 நாடுகள், வசந்த விழாவுக்குச் சட்டப்படி விடுமுறை அறிவித்தன. சுமார் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வசந்த விழா கொண்டாட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், சீனாவில் வசந்த விழாவைக் கொண்டாடுவதில், வெளிநாட்டவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மூன்றாவது தரப்பு மேடையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் வசந்த விழாவின்போது சீனாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை, 2024ஆம் ஆண்டில் இருந்ததை விட 150 விழுக்காடு அதிகரித்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது என்றார்.