கோமின்தாங் கட்சி தலைவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய ஷி ச்சின்பிங்

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங், 19ஆம் நாள், சீன கோமின்தாங் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ச்சேன் சியுவென் அம்மையாருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

இதில் ஷி ச்சின்பிங் கூறுகையில்,

கடந்த சில ஆண்டுகளில், ஜியு ஏர் பொது கருத்தில் ஊன்றி நிற்பது மற்றும் தைவான் பிரிவினைவாதத்தை எதிர்க்கும் அரசியல் அடிப்படையிலும் இரு கட்சிகள், தைவான் நீரிணை இருக்கரைகளுக்கிடையிலான பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் முன்னேற்றி, தைவான் நீரிணை அமைதிக்கும் நிதானத்திற்கும் பாடுபட்டு, இருக்கரை உடன்பிறப்புகளின் நலன்களுக்கு பங்காற்றின. தற்போது வேகமாக மாறி வரும் உலக சூழலில் சீன தேசிய மறுமலர்ச்சி தடை செய்யப்பட முடியாது. இரு கட்சிகள், கூட்டு அரசியல் அடிப்படையில் ஊன்றி நின்று, தைவான் உடன்பிறப்புகளை ஒன்றிணைத்து, பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் ஆழமாக்கி, கூட்டு வளர்ச்சியை முன்னேற்றி, சீன தேசத்தின் அருமையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author