சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஆகஸ்ட் 18ஆம் நாள் சீன அரசவையின் 9ஆவது முழு அமர்வுக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
இதில் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதாரப் பணிகள் குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய பேச்சுகள் ஆய்வு செய்யப்பட்டன.
கட்சி மத்திய கமிட்டியின் அறிவியல்பூர்வ தீர்மானம் மற்றும் ஏற்பாடுகளை சிந்தனையிலும் செயலிலும் ஒன்றிணைத்து பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்துவதோடு விரிவாக்கவும் வேண்டும் என்றும், இவ்வாண்டுக்கான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி நோக்கங்களை நிறைவேற்றப் பாடுபட வேண்டும் என்றும் கூட்டத்தில் லீச்சியாங் வலியுறுத்தினார்.